Header Ads



புர்க்காவையும், நிகாபையும் பொது இடங்களில் அணிவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அஸாத் சாலி

புர்க்கா மற்றும் நிகாப் என்பவற்றை பொது இடங்களில் அணிவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான அஸாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் சமூகம் கண்ணியமாக அரசுக்கு வழங்கிய சுய உறுதி மொழியைக் காப்பாற்றும் வகையில் செயற்படுமாறும் அவர் கேட்டுள்ளார்.

பொது இடங்களில் புர்க்கா அணிவதை தவிர்க்குமாறு உலமா சபை ஏற்கெனவே அறிவித்திருந்ததோடு தமது அமைப்பு தொடர்ந்தும் இதே நிலைப்பாட்டிலே இருப்பதாகவும் உலமா சபையும் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து அவசர கால சட்டத்தின் கீழ் நிகாப் - புர்கா தடை செய்யப்பட்டிருந்ததாகவும் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதோடு அத்தடையும் நீங்கி விட்டதாகவும் அண்மையில் பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், புர்க்கா தடைநீக்கத்திற்குப் பொதுஜன பெரமுன, ஐ.தே.க.மு ,ஹெல உருமய மற்றும் அமைச்சர் மனோ கேணசன் போன்றோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். ஊவா மாகாணத்தில் புர்க்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளதாக ஊவா ஆளுநர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

முகத்திரை அணிய அவசர கால சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டது. அவசர கால சட்டம் இரத்தாவதுடன் இத்தடையும் நீக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டம் கொண்டுவர அரசாங்கம் முயன்ற ​போது நாம் அதனை தடுத்தோம். சுயமாக செயற்பட்டு முகத்திரை அணிவதை தவிர்ப்பதாக அரசுக்கு நாம் வாக்குறுதி அளித்தோம்.

ஆனால், மீண்டும் சிலர் பொது இடங்களில் முகத்திரை அணிய தொடங்குவதால் பிரச்சினை எழ ஆரம்பித்துள்ளது. பொது இடங்களில் இதனை அணிவதைத் தவிர்த்து தனிப்பட்ட இடங்களில் அணியுமாறு கோருகிறோம்.வீணான பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க ஒத்துழைக்குமாறு கோருகிறோம் என்றும் அவர் கோரினார். இதேவேளை, புர்க்கா தடை நீக்கம் தொடர்பில் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ள சம்பிக்கவின் ஹெல உறுமய, அடிப்படைவாதிகளே இவ்வாறான ஆடைத் தெரிவுகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.

நிகாப் தடை நீக்கம், முஸ்லிம் அரசியல்வாதிகளின் அழுத்தத்திலேயே இடம்பெற்றிருப்பதாக ஐ.ம.சு.மு செயலாளர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இது தொடர்பில் தேவையான இடங்களில் எல்லாம் தமது தரப்பு கேள்வியெழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷம்ஸ் பாஹிம்

5 comments:

  1. wearing burga insider home but not in public place ???

    Islam allows women to be without burga inside home... but they are to cover only when they go to public.

    I do not know what these muslim politicians are asking from us.

    Rather they may ask to restrain from going to public area... But asking not to ware burga in public place.. This is against to Islamic teaching.

    Due to security reason,,, the rule can be acceptable... But not under normal situation.. It is violating the right of human selection of their dress.

    ReplyDelete
  2. என்ன ஒரு கோழைத்தனம்

    ReplyDelete
  3. என்ன செய்ய சமூகத்தின் கேடு.ஆழ்ந்த மார்க்கப்பற்றுள்ள அரசியல்வாதிகள் எம்மிடம் அரிது.அதனால் நுனிப் புல் மார்க்கத்தோடு டான்ஸ் ஆடுபவர்கள் எல்லாம் அரசியல்வாதியாகி கருத்துச் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  4. கண் கேட்ட பின் சூரிய நமஸ்கராமா?????

    ReplyDelete
  5. அன்கொடையில் இருக்க வேண்டியவர் வெளிய இருக்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.