அமைச்சரவையில் கடும் வாதப்பிரதி வாதங்கள் - இடைநடுவில் வெளியேறிய மைத்திரியும் ரணிலும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று -19- நடைபெற்ற அமைச்சரவையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தெரிய வருகிறது.
நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பில் கடுமையான வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை ஒழிப்பதற்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அத்துடன் அந்த யோசனையை நீக்கி கொண்டுள்ளனர்.
ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து ஜனாதிபதி கூட்டம் நிறைவடைவதற்கு முன்னரே அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இதன்போது சஜித் பிரிவினரின் எதிர்ப்பு மேலும் அதிகரித்தமையினால் பிரதமரும் அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றுள்ளார் என தெரிய வருகிறது.
Post a Comment