Header Ads



ரவியின் அமைச்சில், பொதுபல சேனாவுக்கு ஆலோசகர் பதவி - அம்பலப்படுத்திய மனோ

உண்மையில் ஞானசாரவுக்கு மன்னிப்பை ஜனாதிபதி வழங்கிய போது, தனது அந்த முடிவுக்கு, சில முஸ்லிம் இஸ்லாமிய அரசியல் மத தலைவர்களின் ஆதரவையும் மைத்திரி பெற்றுக்கொண்டார். முஸ்லிம் தலைவர்கள் அதை ஒரு நல்லெண்ண சமிக்ஞையாகவே செய்தார்கள். ஞானசாரவை சிறையில் பார்க்க, அன்று மைத்திரியின் ஆதரவாளராக இருந்த அப்போதைய மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலியும், ரவி கருணாநாயக்கவும் தான் என்னை வலிந்து அழைத்து சென்றார்கள். 

நாம் அதை ஆதரிக்கவில்லை. ஆனால், அது ஒரு நல்லெண்ண முயற்சி என்பதால் சென்று அமைதியாக நடப்பதை அவதானித்தேன். இன்று வாலை நிமிர்த்த முடியாது என தெரிகிறது. ஆனால், நல்லெண்ண முயற்சி ஒன்றை செய்வதில் எப்போதும் தவறில்லை. 

பொதுபல சேனாவின் பிரதான அமைப்பாளர், அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அமைச்சில் அமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் மூலமாகவே இவர்கள் சென்று அவரை பார்த்தார்கள்

ஆதாரம் - மனோ கணேசன்

3 comments:

  1. இப்போது உண்மை முகம் தெரிந்து விட்டது ஜயா,உங்களால் வெளி வந்த உன்மையை இப்போதாவது கிழக்கில் இருக்கும் ஒரு சில தமிழ் அரசியல் வாதிகள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

    ReplyDelete
  2. உண்மையான இனத்துவேசிகள் யாரென்பது இப்போது சமூகத்துக்குப் புரிகிறது.

    ReplyDelete
  3. சஜித்தை ஈமான் கொண்ட முஸ்லிம்களே மானேவினால் உண்மை வெளிப்பட்டுவிட்டதே! பொது பல சேனாவின் பிறப்பிடம் UNP என இப்போது என்ன கூறுகின்றிர்கள்????? .முழு பூசணிக்காவையும் சோற்றில் மறைக்க முடியுமா ?????

    ReplyDelete

Powered by Blogger.