ஜனாதிபதியின் அனுமதியுடன் யோஷித, மீண்டும் கடற்படையில் லெப்டினன்டாக இணைவு
கடற்படையின் லெப்டினன் தரத்துக்கு யோஷித ராஜபக்ஷவை மீண்டும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல், அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதிக்கமைய, யோஷிதவை பதவியில் அமர்த்துவதற்கான கட்டளையில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வா கையெழுத்திட்டுள்ளார்.
இதனை, கடற்படைப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் டியுனுக்கு மூன்று திரி அழகாக ஆடுகின்றார்.
ReplyDelete