Header Ads



குமார் வெல்கமவை ஜனாதிபதி, வேட்பாளராக்க முடியாது - தயாசிறி

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

அதற்காக இந்தமுறை சுதந்திர கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும்.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்காத பட்சத்தில், அவருக்கு பதிலாக யாரேனும் ஒருவர் களமிறங்க வேண்டும்.

தம்மை களமிறக்குமாறு கோரினால், அதற்கும் தாம் தயாராக இருப்பதாக குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

ஆனால், சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் குமார் வெல்கமவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க முடியாது என்று, அந்த கட்சியின் பொதுசெயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.