Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமிக்க தீர்மானம் - ரணிலும் நிபந்தனைகளுடன் சம்மதம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பெயரிடப்பட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று -24- நடைபெற்ற விசேட சந்திப்பின் போது ஏகமனதாக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கட்சித் தலைவர்கள் ஏகமனதாக தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்புக்கு ஏற்ப, எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்குமாறும் கூட்டணியிலுள்ள கட்சித் தலைவர்கள் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ரணில் பல நிபந்தனைகளை சஜித்திடம் விதித்ததாகவும், அவற்றை சஜித் ஏற்றுக்கொண்டதாகவும் அறிய வருகிறது.

இதையடுத்தே ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமிக்க ரணிலும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.