Header Ads



மகளின் திருமண வீடு, தந்தையின் மரண வீடான சோகம்

மகளின் திருமணம் நடைபெறவிருந்த நாளன்றே, தந்தையார் மரணித்த சோக சம்பவமொன்று மாகடுவாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

நேற்று திங்கட்கிழமை (16.09.2017) ஆம் திகதி தமது இளைய மகளின் திருமணம் தமது இல்லத்தில் இடம்பெறவிருந்த நிலையில், வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் சேர்ந்து, ஞாயிற்றுக்கிழமை 15 இரவு வீட்டை அலங்கரிக்கும் பணிகளில் குறித்த தந்தை ஈடுபட்டிருந்துள்ளார். 

இந்நிலையில், இரவு 10 மணியளவில குறித்த நபருக்கு லேசாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மஹவ வைத்தியசாலைக்கு அவர் அவசரமாக கொண்டுசெல்லப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அவரது நிலை மோசமானதை தொடர்ந்து, அங்கிருந்து இரத்தினபுரி-நிகவரெடிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை (திங்கட் கிழமை) உயிரிழந்துள்ளார். 

மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில், குறித்த தந்தை மாரடைப்பின் காரணமாகவே இறந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி எஸ்.யு. ரத்னாயக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம், குறித்த பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுளள்ளது .

No comments

Powered by Blogger.