"புதன்கிழமையே உத்தியோகபூர்வமான, தீர்மானம் எடுக்கப்படும்"
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவே களமிறங்குவார் என நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.
பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இழுபறி நிலையில் உள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதசவை களமிறக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எவ்வாறெறினும் நாளை மறுதினம் இடம்பெறும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment