Header Ads



நீர்கொழும்பு வெள்ளத்தில் சிக்கியது - நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு


தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, நீர்கொழும்பு நகரின் சில பகுதிகள் இன்று (24)வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, பெரியமுல்லை- தெனியாய வத்தையில் 190 குடும்பங்களும், செல்லக்கந்த பிரதேசத்தில், 40 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன்,  பெரியமுல்லை- ஜயரத்ன வீதியிலுள்ள ரப்பர்வத்தை,  கோமஸ்வத்தை ஆகிய பிரதேசங்களில், 300 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

 வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில்  தற்காலிகமாக தங்கியுள்ளனர். 

எம்.இஸட்.ஷாஜஹான்

No comments

Powered by Blogger.