Header Ads



முஸ்லிம்கள் தாம் விட்ட தவறை நிவர்த்திசெய்ய, இம்முறை கோத்தாபயவுக்கு ஆதரவளிக்க வேண்டும்

தமிழ் மக்கள் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வ­ளிப்­பார்கள் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது என லங்கா சம­ச­மாஜக் கட்­சியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.சோச­லிச மக்கள் முன்­னணி கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

2015 ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இந்த அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தது. ஆனால் கூட்­ட­மைப்­புக்கு அளித்த வாக்­கு­று­திகள் எத­னையும் அர­சாங்கம் நிறை­வேற்­ற­வில்லை. ஆனால் தமிழ் மக்­க­ளுக்கு அர­சாங்கம் ஒன்றும் செய்­யா­விட்­டாலும் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் தனிப்­பட்ட முறையில் இந்த அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நன்­மை­ய­டைந்­தி­ருக்­கின்­றனர்.

அத்­துடன் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாகத் தெரி­வித்­தாலும் வடக்கு தமிழ் மக்கள் இம்­முறை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை நம்­பப்­போ­வ­தில்லை. இது­தொ­டர்­பாக தமிழ் மக்­களை அறி­வு­றுத்தும் வேலைத்­திட்­டத்தை நாங்கள் ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம்.

அத்­துடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வழ­மை­போன்று வடக்கில் இன­வாத பிர­சா­ரத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. கோத்­தா­பய ராஜபக் ஷ தொடர்பில் தவ­றான கருத்­துக்­களை பரப்பி வரு­கின்­றது. 2010 ஜனா­தி­பதி தேர்­தலில் சரத் பொன்­சே­கா­வுக்கு தமிழ் மக்கள் ஆத­ர­வ­ளித்­தார்கள். அப்­ப­டி­யானால் இம்­முறை கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஏன் ஆத­ர­வ­ளிக்க முடி­யாது என்று கேட்­கின்றேன்.

எனவே, ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் கடந்த முறை­போன்று இம்­முறை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை நம்பி ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அதேபோன்று முஸ்லிம் மக்களும் கடந்த தேர்தலில் விட்ட தவறை நிவர்த்தி செய்யும் வகையில் எமக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் என்றார்.

1 comment:

  1. திட்டமிட்டு பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தை இனப்படுகொலை செய்வதுபோன்று நுணுக்கமாகத் திட்டமிட்டு இந்த நாட்டு முஸ்லிம்களை அழிக்கவும் அவர்களின் வாக்களிக்கும் உரிமையை அடியோடு இல்லாமால் செய்வதற்கும், பொருளாதார ரீதியில் அவர்களை அடியோடு இல்லாமல்செய்வதற்கும் மிகவும் நுணுக்கமாக இனத்துவேசிகளைப் பயன்படுத்துவதும் குறிப்பாக நயவஞ்சம் உள்ளத்தில் குடிகொண்ட நன்கு படித்த சோனகர்களைப் பயன்படுத்தியே அந்த சமூகத்தை அழிக்க நுணுக்கமாகத் திட்டமிட்டு செயற்படுத்தும் இனத்துவேச அரசியல் வங்கரோத்துக்காரன்களுக்கு வாக்களித்து முஸ்லிம்கள் தங்கள் உரிமையைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என வக்காளத்து வாங்கும் உம்மைப்போன்ற பயங்கரவாதிகளின் பேச்சுக்களை நம்ப இந்த நாட்டு முஸ்லிம்கள் யாரும் இனியும் நிச்சியம் தயாராக இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.