Header Ads



சஜித்திற்கு ஆங்கிலம் தெரியுமா..? அதிகமான பெண்கள் அவரை நம்புகிறார்கள் - சந்திராணி

ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக பாரியளவில் பெண்கள் பேரணி நடத்தப்படும் என, அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

சஜித் வெற்றிக்காக பாரிய பெண்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி ஆவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு அதிகமாகவே உள்ளது. அதனை வெற்றிகரமாக நடத்த எங்களால் முடியும். பெண்கள் மத்தியிலும் இது தொடர்பான நம்பிக்கை உள்ளது.

சஜித் அப்பாவி பெண்களுக்கு வழங்கும் உதவிகளே இந்த நம்பிக்கைக்கு முக்கிய காரணமாகியுள்ளது. பெண்களுக்கு உதவ அவருக்கு சக்தி உள்ளது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

சஜித்திற்கு ஆங்கிலம் தெரியுமா என்ற பெரிய சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. அவர் நன்கு படித்த ஒருவர் என்பதனை இன்று நாட்டில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அவரது குறைகளை தேடவே இன்று அனைவரும் முயற்சிக்கின்றார்கள்.

எனினும் முன்னாள், இன்னாள் தலைவர்களும் பெரியளவில் கற்றவர்கள், பட்டதாரிகள் அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் போராட்டம் ஒன்று சஜித்திற்காக காத்திருப்பதாக அமைச்சர் சந்திராணி பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. leading ladies like you are very important for SAJITH PREMADASA'S victory.

    ReplyDelete
  2. English is not the Qualification Sajith doesn't have leadership qualification of good records. He is also Anti Muslim.
    We VOTE for JVP Or SDP

    ReplyDelete

Powered by Blogger.