கிழக்குமாகாண சிறந்த விளையாட்டு வீரராக, அகமட் அய்மன் தெரிவு
கிழக்குமாகாண சிறந்த விளையாட்டு வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் அப்துர்ரஹ்மான் அகமட் அய்மனுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) இடம்பெற்றது.
குறித்த மாணவன் கிழக்கு மாகாண போட்டியில் குண்டெறிதல் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்று தேசியப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதோடு, கிழக்கு மாகாணத்தில் சிறந்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
மிகச் சிறந்த முன்மாதிரி, இதே முன்மாதிரியை ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலை நிர்வாகமும், கல்விக்காரியாலயமும் பின்பற்றி மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் ஆற்றலைமேன்படுத்தவும் அவர்களின் திறன்களை வெ ளிக்கொணரவும் பாடசாலை நிர்வாகங்கள் ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுக்கவேண்டும். மாணவன் அஹ்மட் அய்மனுக்கு எமது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகும்.
ReplyDelete