Header Ads



ஊவா மாகாணத்தில் புர்க்கா அணிந்தால், கைது செய்யப்படுவீர்கள்- மைத்திரி எச்சரிக்கை

புர்கா அணிய விதிக்கப்பட்ட தடை அவசரகாலச் சட்டம் அமுலில் இல்லாத காரணத்தினால், அதற்கான தடை நீங்கினாலும் ஊவா மாகாணத்தில் அந்த தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அந்த மாகாணத்தின் ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், ஊவா மாகாணத்தில் எங்காவது புர்கா அணிந்து சென்றால், அதனை அணிந்து செல்லும் நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.

ஊவா சமூக வானொலியில் இடம்பெற்ற நேரடி நேர்காணல் ஒன்றில் புர்கா தடை நீக்கம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மதத்திற்காக நாட்டையும் மக்களையும் பணயம் வைக்க முடியாது. நான் அடிப்படைவாதி அல்ல. இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் சிரமமான காலக்கட்டத்தில், ஞானசார தேரருக்கு எதிராக குரல் கொடுத்தவன். முஸ்லிம், பௌத்த, தமிழ் எந்த அடிப்படைவாதமாக இருந்தாலும் அதனை நான் எதிர்ப்பவன் எனவும் மைத்திரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. என்ன ஊவா மாகாணம் தனி ஒரு நாடா அதற்கு தனிச் சட்டமா இலங்கையின் சட்டதிட்டம் அதற்கு பொருந்தாதா?

    ReplyDelete
  2. This is a bad sign of bad corroborated leadership.

    ReplyDelete
  3. சட்டம் மாகாணத்துக்கு மாகாணம் வித்தியாசமா

    ReplyDelete
  4. நாட்டில் இரு சட்டங்கள் வேண்டாம்.ஒரு சட்டம் மாத்திரம் தான் தேவை என கத்தும் குரல்கள் எங்கே?

    ReplyDelete
  5. our community should take immediate action to clarify his statement before arresting any of our ladies with Burka.

    ReplyDelete
  6. Dear Governer, someone misguiding you

    ReplyDelete
  7. Why don't ACJU guide our Muslim sistets on this matter?

    ReplyDelete
  8. Hon Governor; Your job is something like a job of The President of Sri Lanka in Uva Province. You must rule of that area very honestly. You are also having to be a teacher for the inhabitants as a model how a civilised person to be behaved. Do not try to saw inappropriate views affect the atmosphere among the citizens.

    ReplyDelete

Powered by Blogger.