நான் ஒருபோதும் கொலைக்காரர்களான, ராஜபக்ஷவினரிடம் சரணடைய போவதில்லை - மேர்வின்
தான் ஒரு போதும் கொள்ளையர்கள் மற்றும் கொலைக்காரர்களான ராஜபக்ஷவினரிடம் சரணடைய போவதில்லை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
மறு ஜென்மத்தில் கூட ராஜபக்ஷவினர் பிறக்கும் இடங்களில் பிறக்க கூடாது என அவர் குறிப்பிட்டார்.
அதேபோல தான் நன்றி கெட்ட ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் பெயரை உச்சரிக்க கூட விரும்பவில்லை என அவர் இதன்போது கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து தமக்கு அரசியலை தொடருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தால், அந்த கட்சிக்கு தாம் செய்த தவறுகளை உணர்ந்து அனைத்து தவறுகளை திருத்திக் கொள்வதற்கன சந்தர்ப்பமாக இதை பயன் படுத்திக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment