Header Ads



புதன்கிழமை ஜனாதிபதி வேட்பாளர் குறித்த, ஏகமனதான தீர்மானம் வெளியாகும் - முஜூபூர் ரஹ்மான்

புதன்கிழமை கூடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த ஏகமனதான தீர்மானம் வெளியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜூபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

செயற்குழுவும், கட்சியின் பாராளுமன்ற குழுவும் கட்சியின் யாப்பிற்கு அமைய வேட்பாளர் குறித்த தீர்மானத்தை எடுக்கும் எனவும், அதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் யோசனைகள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

சிறுபான்மை கட்சிகள் அனைவரும் தம்முடன் இருப்பதாகவும் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர்கள் அதிகம் எனவும் கூறினார். 

மஹிந்த தலைமையிலான கட்சியில் ராஜபக்ஷ பரம்பரையை தவிர வேறு ஒருவர் இல்லை என தெரிவித்த அவர், தனது கட்சியில் போட்டியிட ஆர்வமுள்ள பலர் உள்ளதால் அவர்களில் சிறந்த ஒருவரை தெரிவு செய்வதில் சிக்கல் இருக்காது எனவும் கூறினார். 

ஐ.தே.க குடும்பம் ஒன்றை பிரதிநிதிதுவப்படுத்தும் ஒரு கட்சி இல்லை எனவும், அனைத்து அதிகாரங்களையும் தம்வசம் வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷவை கடந்த 2015 இல் தோற்கடித்தாகவும் அதே நிலைமை இந்த முறையும் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார். 

தமது கட்சியில் எவரும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச நிதியை பயன்படுத்த போவது இல்லை எனவும் அது தொடர்பில் எவரெனும் அறிய விரும்பினால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 

தேர்தலில் மக்கள் தீர்ப்பே முதன்மையானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.