நாட்டில் சீரற்ற காலநிலை - தேவையேட்படின் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில மாகாணங்களில் இன்று இரவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் தேவையேட்படின் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment