முந்தல் பிரதேசத்தில், கரையொதுங்கிய டொல்பின்
புத்தளத்தில் நேற்றைய தினம் -24- இறந்த நிலையில் டொல்பினொன்று கரையொதுங்கியுள்ளது.
முந்தல் பிரதேசத்தின் பள்ளிவாசல்பாடு கிராமத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த டொல்பினானது சுமார் ஆறு அடி நீளமுடையது என தெரியவருகிறது.
எனினும் அந்த டொல்பின் கரையொதுங்கிய போது பல காயங்களுடன் இறந்த நிலையில் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த டொல்பினை அதிகளவான மக்கள் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment