இன்று மைத்திரி - ரணில் சந்திப்பு, அமைச்சரவை கூடுகிறது - சர்வஜன வாக்கெடுப்புக்கு திட்டம்
அமைச்சரவையின் விசேட கூட்டம் ஒன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று -19-கூட்டியுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி மைத்திரியும் – பிரதமர் ரணிலும் நடத்திய சந்திப்பின் பிரகாரம் இந்த அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது.இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைச்சரவை கூட்டம் நடக்கும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் – அதாவது அரசியலமைப்பின் 20 வைத்து திருத்தத்தை செய்யும் யோசனை இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது அதற்கு அனுமதி கிடைத்தால் பாராளுமன்றத்தின் விசேட கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும்.அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்லும் நிலை ஏற்படும்.அப்படியானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் ஆறு வாரங்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடக்கும்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
TN
எல்லாம் திரு.ரனிலின் நரி விழையாட்டு
ReplyDelete