பசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து விளையாட்டில் கொடிகட்டி பறப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர், ஓட்டலில் தங்கும்போது ஊழியர்களுக்கு டிப்ஸ்-ஆக லட்சக்கணக்கில் பணம் வழங்குவார்.
டின்னர், பார்ட்டி என பணத்தை தண்ணீராக செலவழிப்பார். அந்த அளவிற்கு அவருக்கு வருமானம் கிடைக்கிறது. வருமானம் அவருக்கு ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் சிறுவயதில் சற்று பொருளாதாரத்தில் குறைவாகவே இருந்துள்ளார். பர்கர் வாங்கும் அளவிற்குக் கூட அந்த நேரம் பணம் இல்லாமல் தவித்துள்ளார்.
சிறுவயதில் பயிற்சி முடிந்த பின்னர் சாப்பிட்டிற்கு உணவு இல்லாம் பசியால் வாடியுள்ளார். அப்போது அருகில் உள்ள மெக்டெனால்டில் வேலைப்பார்த்த பெண்மணிதான் அவருக்கு உதவியுள்ளார்.
டிவி ஒன்றுக்கு பேட்டியளித்த ரொனால்டோ இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அப்போது அந்த பெண்ணை கண்டுபிடித்து அவருக்கு கைம்மாறாக, நான் டின்னருக்கு அழைக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
இதுகுறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘போர்ச்சுக்கல் லிஸ்பன் ஸ்போர்ட்டிங்கில் சிறுவனாக இருந்த போது, பயிற்சி முடிந்த பின்னர் பசியாக இருக்கும். அப்போது, நாங்கள் இருக்கும் கட்டிடத்திற்கு அருகில் மெக்டொனால்டு இருந்தது. அங்கு சென்று கதவை தட்டுவோம். அங்குள்ளவர்களிடம் பர்கர் இருந்தால் கொடுங்கள் என்று கேட்போம். எட்னா என்ற பெண் எனக்கு பர்கர் தந்து உதவினார்.
தற்போது அவருக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். அவருடன் சேர்ந்து மேலும் இரண்டு பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை கண்டுபிடித்து டுரின் அல்லது லிஸ்பனில் டின்னர் கொடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.
மாலை மலர்
Post a Comment