Header Ads



நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல், பிக்குவின் உடல் ஆலய வளாகத்தில் தகனம்


முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல்  கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நடவடிக்கையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. கல்முனையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மற்றும் தீவிரவாதியின் உடலை தமிழ் பிரதேசத்தில் புதைக்க கூடாது என கூக்குரலிட்டவர்கல் ( புலி பயங்கரவாதிகலின் லட்சக்கனக்க்கான உடல்கள் தமிழ் பிரதேசங்களில் புதைக்கப்பட்டது வேறு கதை) அந்த காட்போட் வீரர்கள் இப்போ ஜானசாரா வந்ததும் புடவைகலுக்குல் ஒழிந்து விட்டார்களா?

    ReplyDelete
  2. Very good move by Gnanasara. will go to jail again soon.

    ReplyDelete
  3. Ithukkallam sattam illaya

    ReplyDelete

Powered by Blogger.