Header Ads



எனக்கும் ரணிலுக்கும் இடையில், முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி - ஹக்கீம்

எனக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாததும்பர தொரகமுவ பகுதியில் இன்றைய தினம் -21- நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

எனக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். நான் ஆத்திரப்படும் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தம்மை சமாதானப்படுத்துவார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் வாதங்கள் விவாதங்கள் செய்வதற்கு போதியளவு அவகாசம் உண்டு, அதனை பிரதமர் நன்கு அறிவார்.

எங்களுடைய அனைத்து வாதப் பிரதிவாதங்களும் நாட்டின் அபிவிருத்தியை முதன்மையாகக் கொண்டதாகும். சிறந்த அனுபவமிக்க அரசியல்வாதி என்ற அடிப்படையில் பிரதமர் அதனைப் புரிந்து கொண்டுள்ளார்.

எதிர்வரும் வாரமளவில் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வெற்றி பெறும் வேட்பாளரை தெரிவு செய்து வெற்றிப் பயணம் செல்வோம் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.