ரணிலோ, சஜித்தோ, கருவோ யாராக இருந்தாலும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் - மகிந்த
தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளராக இருந்த போது, அழுத்தங்களை வழங்கிய அரசியல்வாதி தொடர்பான தகவல்களை, அவர் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டுறவு சங்க அதிகாரிகளின் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கிலேயே அரசாங்கம் போலியான வழக்குகளை பதிவு செய்திருந்தமை அவரது கூற்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அரசாங்கம் ராஜபக்ஷவினரை தடுப்பதற்காக மேற்கொண்ட அரசியல் யாப்பு திருத்தங்கள், நாட்டையே ஆபத்தில் தள்ளிஇருக்கிறது.
நவம்பவர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதன் பின்னர், ரணிலோ, சஜித்தோ, கருவோ யாராக இருந்தாலும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற மகிந்த மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இந்தநிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மகிந்த ஆட்சி காலத்தில், நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற தாகம், மகிந்தவிற்கு இருந்ததாக தெரிவித்தார்.
தற்போது கொழும்பில் இடம்பெறும் அபிவிருத்திகள் அனைத்தும் மகிந்த ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment