நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை, ஒழிப்பதற்கு சஜித் எதிர்ப்பு
சற்று முன்னர் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது என தெரிவித்துள்ள அமைச்சர் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இது குறித்து கலந்துரையாடப்படவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு குறித்து தற்போது கலந்துரையாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் இதனை முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்,அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே பிரதமருக்கு நாங்கள் இதனை அறிவித்துவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எந்த நடவடிக்கையும் ஜனாதிபதி தேர்தலின் பின்னரே இடம்பெறவேண்டும்,தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது நல்லதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment