Header Ads



பொது வேட்பாளராக, களமிறங்குவாரா சஜித்..?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வாழைச்சீப்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர். “அப்படியொரு பேச்சுக்கான அழைப்பு இன்னும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து கிடைக்கவில்லை.

அவ்வாறு அவர் முன்வருவதாயின் அதற்கான ஏற்பாடுகளையும் தாம் செய்யத்தயார் என்றும் பதிலளித்தார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான மருத்துவர் கிரிஷான் கருத்து வெளியிடுகையில், அப்படியொரு பேச்சுக்கள் திரைமறைவில் இடம்பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தாம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை என்பதை அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இருப்பினும், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நவம்பர் மாதத்தில் அப்போதைய சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பொது வேட்பாளராக போட்டியிட உள்ளீர்களா என்று ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது பொய்யான தகவல் என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.