மக்களே அவதானம்,, ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நில்வலா, ஜிங் மற்றும் களு கங்கைகளின் நீர்மட்டம் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த ஆறுகளின் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டடுள்ளனர்.
அத்தோடு, வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வாழும் மக்கள் தேவையேற்பட்டால் அவ்விடத்திலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment