நாங்கள் வெட்கப்படவில்லை, கௌரவமாக இருக்கின்றோம் - எஸ்.பி.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையில் மோதல்கள் ஏற்படாத அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் நிலைப்பாடுகளுக்கு அமையவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டேன். இதனால், அரசியல் ரீதியாக நான் எடுத்து சரியான முடிவு.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த பண்டாரநாயக்க மற்றும் ராஜபக்சவினருக்காக நாங்கள் சரியான தீர்மானங்களை எடுத்தோம்.
அந்த கட்சியை பாதுகாத்த மக்களுக்காகவும் நாங்கள் சரியான தீர்மானத்தை எடுத்தோம். மக்களின் விருப்பத்திற்கு அமைய நாட்டின் இடதுசாரி அணியில் நாங்கள் இணைந்தோம்.
இதனால், நாங்கள் வெட்கப்படவில்லை, கௌரவமாக இருக்கின்றோம். சுற்றுலாத்துறையில் பாதிக்கப்பட்டுள்ள லட்சணக்கானவர்கள் நாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் மோதிக்கொள்ளாத அரசாங்கம் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
UNGALAKKU ATHU IRUNDHAL INDHA NAADU ENGYOO POOI IRUKKUM
ReplyDelete