ரணிலுக்கு அனுப்பிய கடிதத்திற்கு, இதுவரை எனக்கு பதில் கிடைக்கவில்லை - சஜித்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனினும், இதற்கான பதில் இதுவரை தனக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்றக் குழு ஆகியவற்றின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையிலான தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (17) காலை நடைபெற்றது.
கொழும்பிலுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Post a Comment