Header Ads



முஸ்லிம்களின் ஆதரவு சஜித்திற்கா...?

- எம்.எஸ்.அமீர் ஹூசைன் -

ஜனாதிபதித் தேர்தல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் அவகாசம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஆகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேச்பிபரிய அறிவித்தள்ளார்.  2018 செப்டம்பர் 18 ஆம் திகதி காலையில் தேர்தல் ஆணைக்குழுவில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பொன்றை ஆணைக்குழுவின் தலைவர் நடத்தினார். அந்த சந்திப்பின் பின்னரே தேர்தலுக்கான அரசாங்க வர்த்தமாணி அறிவித்தல் 2019 செப்டம்பர் 19 ஆம் திகதி வெளியிடப் பட்டிருக்கின்றது. வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் 2019 செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06 ஆம் திகதி நன்பகல் 12.00 மணி வரை வழங்கப்பட்டிருக்கின்றது. வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 07 ஆம் திகதி காலை 9.00 மணியில் இருந்து 11.00 மணி வரை வழங்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவால் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதனால் இதுவரையில் மந்நதகதியில் ஜனாதித் தேர்தலுக்கான நகர்வுகளை மேற்கொண்டு வந்த அரசியல் கட்சிகள் இனி சுறு சுறுப்படைய வேண்டிய தருணம் வந்திருக்கின்றது.

ஏற்கனவே எதிர்க்கட்சித்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுடனான கூட்டணியான பொதுஜன பெரமுண கட்சி அதன் ஜனாதிபதி அபேட்சகர் யார் என்பதை அறிவித்துவிட்து. அவ்வாறே மக்கள் விடுதலை முன்னணியும் அதன் ஜனாதிபதி அபேட்சகர் அநுர குமாரதிசாநாயக்கா என்பதை அறிவித்திருக்கின்றது. அத்துடன் இன்னும் சிறிய இடதுசாரி கட்சிகள் இரண்டும் அவற்றின் அபேட்சகர்களை அறிவித்திருக்கின்றது.
ஆனாலும் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அவற்றின் ஜனாதிபதி அபேட்சகர்கள் யார் என்பதை இதுவரையில் அறிவிக்கவில்லை. இவ்விரு கட்சிகளுக்குள்ளும் தொடரும் இழுபரி நிலையே அவற்றின் ஜனாதிபதி அபேட்சகள்காளை அறிவிக்க முடியாத நிலைக்கு காரணமாகும். தற்போது ஆட்சியில் பங்காளிகளாக இருந்து வரும் ஸ்ரீ.ல.சு.கட்சியும் ஐ.தே.க. யும் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகரை தெரிவு செய்வதில் கட்சிக்குள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதால் அபேட்சகர் யார் என்பதை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த இழுபரி நிலை தொடரும் நிலையில் ஐ.தே.க. அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான தமிழ் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் 2019 செப்டர்பர் 14 ஆம் திகதி அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பின்போது ஐ.தே.க. வின் அமைச்சரும் தற்போதைய நிலையில் தாமே ஜனாதிபதி அபேடசகர் என்று நாடாளவிய ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் ஐ.தே.க. வின் உப தலைவர்களுள் ஒருவருமான சஜித் பிரேமதாசாவும் பங்குபற்றினார். அந்த சந்திப்பின்போது ஐ.தே.க. ஆதரவு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கொள்கையளவில் அவர்களது ஆதரவை சஜித் பிரேமதாசாவிற்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஆதனால் ஐ.தே.க. வின் ஜனாதிபதி அபேட்சகராக எதிர்பாhக்கப்படுகின்ற சஜித் பிரேமதாசாவிற்கு புதிய நம்பிக்கை பிறந்திருக்கின்றது. ஏற்கனவே ஐ.தே.க. வின் ஜனாதிபதி அபேடசகர் கரு ஜயசூரியவா அல்லது பிரதமர் ரனில் விக்கிரமசிங்காவா என்று தெளிவில்லாத நிலையில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு காரணமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அபேட்சகராக கரு ஜயசூரியவை விட சஜித் பிரேமதாசா களம் இறங்கும் போது ஐ.தே.க. வின் வெற்றி வாய்ப்பு உறுதியாகலாம் என்ற நம்பிக்கையும் ஐ.தே.க. ஆதரவாளர்களிடையில் துளிர் விட ஆரம்பித்திருக்கின்றது. இந்த சந்திப்பின்போது ரவுப் ஹக்கீம், ரிசாத் பதியுத்தீன், மனோ கனேசன், பழணி திகாம்பரம், சம்பிக ரணவக ஆகியோர் பங்குபற்றினர்.

அதே நேரம் சஜித் பிரேமதாசாவுடன் அவரது ஆதரவு அணியின் முக்கிய உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பாலித ரங்கபண்டார, கபீர் ஹாசிம் ஆகியோர் களந்து கொண்டுள்ளனர். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாசா சந்திப்பு திருப்திகரமானதாக இருந்ததாகவும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளது ஆதரவு கிடைப்பது உறுதியாகி விட்டதாகவும் தெரிவித்தார். அதே நேரம் அடுத்த ஜனாதிபதி; தேர்லுக்கான ஐ.தே.க. சார்பாக போட்டியிட களம் இறக்கவுள்ள அபேட்சகர் யார் என்பது தொடர்பாக அறிக்கையொன்றை சமர்பிப்பதற்காக அதன் தலைவர் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கா 04 பேர் கொண்ட குழுவொன்றையும் ஏற்கனவே நியமித்துள்ளார்.

இந்த குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அளவில் பிரதமரிடம் ஒப்படைக்கப் படலாம். அந்த அறிக்கையின் பின்னர் ஜனாதிபதி அபேட்சகர் தொடர்பாக பிரதமர் ஒரு உறுதியான முடிவுக்கு வரலாம் என்று எதிர்பாhக்கப்படுகின்றது. அதே நேரம் ஐ.தே.க. வின் தலைமைத்துவத்திற்கு தாம் கட்டுப்படுவதாகவும் அதன் முடிவுக்கு அப்பால் செல்வதில்லை என்றும் வேறு எந்த அணியுடனும் கூட்டுச் சேரப்போவதில்லை என்றும் சஜித் பிரேமதாசா உறுதிமொழி யொன்றையும் வழங்கியுள்ளார். அத்துடன் மேலும் தாமதிக்காமல் ஐ.தே.க. வின் நிறைவேற்றுக் குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆகியவற்றை கூட்டி ஜனாதிபதி அபேடசகர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்காவிற்கு விடுத்துள்ளார்.

தற்போதைய நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளது தலைவர்களுடன் சஜித் பிரேமதாசா பொயரளவிலான பேச்சுவார்த்தை நடத்தினாலும் அவரால் அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு அவர்களது வேண்டுகோள்கள் தொடர்பாக உறுதிமொழிகளை வழங்க முடியாதிருக்கின்றது. இந்த ச்நதிப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் கட்சிகளது தலைவர்கள் முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக விடயங்களை முன்வைத்துள்ளனர். அவ்வாறே ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பும் சஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றது. அவர்களது கொரிக்கையாக அமைந்திருப்பது தமிழர்களது பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதாகும்.

ஏப்ரில் 21 ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னர் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற நெருக்கடி நிலைமைகள், கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி தடுத்து வைக்கப் பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களது  விவகாரம் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாதவர்களை விடுதலை செய்தல், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு உட்பட பல விடயங்களுக்கு தீர்வு வேண்டும் என்பதை வழியுறுத்தியுள்ளனர். அவ்வாறே திழர் தரப்பில் மலையகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் மனோ கனேசன் மற்றும் பழணி திகாம்பரம் ஆகியோர் மலையக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சம்பள உயர்வு போன்ற பிரச்சினைகளை முன்வைத்து அவற்றை தீர்த்து வைப்பது தொடர்பான சஜித்தின் நிலைப்பாட்டை கோரியுள்ளனர்.

இந்த கோரிக்கைகள் எதனையும் சஜித் மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனாலும் கட்சியின் உயர் மட்டம் ஏற்கனவே கடந்த வாரம் சஜித்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அவரையே சிறுபான்மை கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருமாறு கேட்கப்பட்டிருந்தது. அதற்கிணங்கவே இந்த சந்திப்புக்கள் நடைபெற்றுளள்ன எனலாம். எவ்வாறாயினும் தோதல் விஞ்ஞாபனம் ஒன்றை வரைவதும் பிரதான கட்சியான ஐ.தே.க. வின் ஜனாதிபதி அபேட்சகருக்கு ஆதரவு வழங்க முன்வரும் சிறிய மற்றும் சிறுபான்மை இனங்களது கேரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கும் பொறுப்பு கட்சியின் தலைமைத்துவத்தை சார்ந்ததாகும். வெறுமனே ஒரு அபேட்சகர் கட்சியின் வரையறைக்கு வெளியில் இருந்து வழங்கும் வாக்குறுதிகளால் எதுவும் நடக்கப்போவதில்லை. தோதலுக்கான அறிவித்தல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஐ.தே.க. வின் தலைமைத்துவம் இப்போது மேலும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது என்றே கருத முடிகின்றது.

அடுத்து வரும் நாட்களில் அதன் ஜனாதிபதி அபேட்சகர் யார் என்பதை அறிவிக்க வேண்டி இருப்பதே இந்த நெருக்கடிக்கு காரணமாகும். அதே நேரம் கடந்த 18 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்துள்ள அறிக்கையொன்றில் அவர் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க. வின் அபேட்சகராக போட்டியிட்டு வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதி மொழியொன்றை வெளியிட்டுள்ளார். அவரை போட்டியிடுமாறு பல மட்டங்களில் இருந்து அலுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் ஐ.தே.க. தலைமைத்துவம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பணித்தால் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த அறிவித்தலானது ஜனாதிபதியாகும் கணவுடன் வலம் வரும் சஜித் பிரேமதாசாவிற்கு ஆப்பு வைக்குமா என்ற கேள்வியையும் எழச் செய்திருக்கின்றது. அவரது இந்த அறிவித்தலானது அவர்தான் ஜனாதிபதி அபேட்சகராக இருக்குமோ என்று சிந்திக்கச் செய்வதாக இருக்கின்றது.

எவ்வாறோ சஜித் பிரேமதாசா இனியும் பொருமை காக்க மாட்டார். தோதல் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான நாள் குறிப்பிட்ட பின்னரும் தொடர்ந்தும் ஐ.தே.க. வின் தலைமைத்துவத்தை நம்பி ஏமாற்றம் அடைய சஜித் தயாராக இருக்க முhட்டார். அவரது பொருமையின் கடைசி வாரம் அடுத்த வாரம் மாத்திரமே என்று கருத முடிகின்றது. ஐ.தே.க. தொடர்ந்து இழுத்தடிப்பு செய்யுமானால் சஜித் பிரேமதாசா அடுத்த வாரம் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இந்நிலையில் முஸ்லிம் தரப்பை பொருத்தவரையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு நெருக்கடி நிலை ஏற்பட இடமிருக்கின்றது. ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் அபேட்சகராக அறிவிக்ப்பட்டுள்ள மஹிந்த சார்பு பொது ஜனபெரமுண கட்சியின் வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவை சுற்றியுள்ள பேரினவாத முஸ்லிம் விரோத தரப்பு முற்றிலும் சிங்கள வாக்குகளை பெற்றுக்கொண்ட சிங்கள வாத தலைவர் ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என்று எதிர்பார்ககின்றனர். அமைச்சர்களாக ரிசாத் பதியுத்தீன், ரவுப் ஹக்கீம், ஹிஸ்புல்லர், அசாத் சாலி ஆகிய எவரையும் இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று மஹிந்த ராஜபக்ஷவை சூழவுள்ள சிங்களவாதிகள் மஹிந்தவிற்கு கடுமையான அலுத்தங்களை வழங்கி வருகின்றனர்.

அத்துடன் ஆதரலியே ரத்ன தேரர், கலபொட அத்தே ஞானசார தேரர், சிங்ஹலயே ராவய அமைப்பு, ஐக்கிய பிக்கு முன்னணி, தேச மீட்பு முன்னணி உட்பட முஸ்லிம் விரோதிகள் அனைவரும் கூற வருவது சிறுபான்மை ஆதரவு இல்லாத தூய சிங்கள வாக்குகளால் சிங்கள தலைவர் ஒருவர் தெரிவாக வேண்டும் என்பதையாகும். அதனால் கோதாபய ராஜபக்ஷ அவரது வெற்றியை திட்டவட்மாக உறுதி செய்ய வேண்டுமானால் இத்தகைய சிங்கள தீவிவரவாத சிந்தனை போக்கு சக்திகளை திருப்திப்படுத்த வேண்டும்.

அதனால் எந்த வகையிலும் முஸ்லிம் தரப்பை பகிரங்கமாக இணைத்து அவர்களது கோரிக்கைகளை ஏற்று வாக்குறுதிகளை வழங்க முன்வரமாட்டார் என்று எதிர்பார்க்க முடிகின்றது. இம'முறை தேர்தலில் பிரதான பேசு பொருளாக மாற இருப்பதும் முஸ்லிம் தீவிவரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம் என்பவற்றை தோற்கடிப்பேன் என்பதாகும். அதுவே சிங்கள தரப்பை திருப்திப்படுத்தும் இனிய வார்த்தைகளாக மாறவுள்ளன. அத்துடன் மேடைகளில் இஸ்லாமிய விரோதம் பேசப்படும் தலைவர்களுக்கே வரவேற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இனவாதிகள் எதைச் சொன்னாலும் சிறுபான்மை இனங்களது ஆதரவு இல்லாமல் ஒருபோதும் சிங்கள தலைவர் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக முடியாது. அத்துடன் பொதுத் தேர்தல் ஒன்றின் பின்னர் எந்தவொரு பெரும்பான்மை அரசியல் கட்சிகளும் சிறுபான்மை இனங்களான தமிழர்களதும் முஸ்லிம்களதும் ஆதரவு இல்லாமல் பாராளுமன்ற அதிகாரத்தை பிடிக்கவும் முடியாது. இத்தகைய ஒரு நிலையில் ஏற்கனவே ஐ.தே.க. வுக்கு ஆதரவு வழங்கி வரும் ரிசாத் மற்றும் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் வெளிப்படையாக பேரம் பேசி தமது சமூக மயப்படுத்தப்பட்ட பிரச்சினைகளை ஓரளவிற்காவது தீர்த்துக்கொள்ள கதவுகளை அகளத் திறக்கவுள்ள ஒரே இடம் ஐ.தே.கட்சி என்றே கூறலாம்.

ஆனாலும் முன்னால் அமைச்சரும் ஆளுனருமாக இருந்த ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் ஏற்கனவே ஸ்ரீ.ல.சு.கட்சியின் பின்புல ஆதரவாளர்களாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசோனவின் ஆதரவாளர்களாகவும் இருந்து வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இத்தகைய சூழ்நிலையில் இவர்களது அரசியல் நகர்வுகள் எப்போதும் மைத்திரிபால சிரிசேனாவுக்கு சார்பானதாகவே அமையும். அத்துடன் கிழக்கு மாகணத்தில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் தேசிய கூட்மைப்பை ஏற்படுத்தி அரசியலில் பிரகாசிக்கு முயற்சிகளை முன்னெடுத்து அந்த இலட்சியம் கைகூடாத நிலையில் உள்ள பஷீர் சேகுதாவூத் உட்பட ஒரு சில அரசில் தலைவர்கள் அவர்களது ஆதரவை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்குவதிலே ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அதனால் மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கை பெற்ற அணியினர் எதிர்வரும் தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களது வாக்குகளை எப்போதும் கோதாபய ராஜபக்ஷ அல்லது சிரந்தி ராஜபக்ஷவிற்கு பெற்றுக் கொடுப்பதிலே கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அல்லது அந்த வாக்குகளை ஐ.தே.க. விற்கு கிடைப்பதை தவிர்த்து ஐ.தே.க. வின் வெற்றியை உறுதிப்படுத்த முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றே கருத முடிகின்றது.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் இருந்து முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வும் இம்முறை ஜனாதிபதி அபேட்சகராக களம் இறங்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது. ஆனாலும் அதுபற்றி உறுதுpப்படுத்திக் கொள்வதற்காக ஹிஸ்புல்லாஹ்வை தொடர்புகொள்ள முயற்சி செய்த போது அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்று அறிய முடிந்தது. எவ்வாறாயினும் ஹிஸ்புல்லாஹ்வும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக களம் இறங்குவாராயின் இத்தகைய ஒரு பின்புலத்துடனேயே அவர் தேர்தலில் களம் இறங்குவார். இருந்தர்லம் ஹிஸ்புல்லாஹ்வை பொருத்தவரையில் மட்டக்களப்பு கெம்பஸ் என்ற கல்வி நிறுவனத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பொறுப்பு இருந்து வருகின்றது.

இந்த கல்வி நிறுவனம் தொடர்பாக அரசாங்க மட்டங்களிலும் நாட்டிலும் பாரிய அலை ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன் இந்த கல்வி நிறுவனத்தின் உரிமை மற்றும் நிர்வாகம் பற்றியும் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஹிஸ்புல்லாஹ் வேட்பாளராக களம் இறங்கினால் பிரதான கட்சிகளது ஜனாதிபதி அபேடசகர்கள் அவரை அழைத்து பேச்சுவாhத்தை நடத்தி அவரது கல்வி நிறுவனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதாக வாக்குறுதி வழங்கி போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளுமுhறு கோரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம்.

மறுபுரமாக ஹிஸ்புல்லாஹ்வை களம் இறக்க பின்புலத்தில் இருந்து ஊக்கமளிக்கும் கிழக்கின் மூத்த அரசியல்வாதிகள் அவர் போட்டியிட்டு குறைந்தபட்சம் 50.000 வாக்குகளையாவது பெற்றால் அதன் ஊடாக ஐ.தே.க. ஜனாதிபதி அபேட்சகரின் வெற்றியை வீழ்த்தி கோதாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்தால் அந்த கைங்கரியத்திற்காக குறித்த அரசியல்வாதிகள் அதே ஜனாதிபதியாக வரும் கோதாபயவின் தயவில் தேசிய பட்டியலில் இடமும் பின்னர் அமைச்சர் பதவிகளையும் பகிர்ந்துகொண்டால் அது ஹிஸ்புல்லாஹ்வுக்கு பாரிய தோள்வியாகவும் ஏமாற்றமாகவும் அமையலாம். எனவே களம் இறங்க முன்னர் பல கோணங்களில் இருந்து சிந்திக்க வேண்டிய பொறுப்பு ஹிஸ்புல்லாஹ்வை சார்ந்ததாகும்.

2 comments:

  1. The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success. “Wait and see” what the Muslims voters will do in the Eastern and Northern provinces too, Insha Allah.
    The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power. THEY WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM TO SOLVE THE MUSLIM FACTOR ISSUES TOO, Insha Allah.The Archbishop of Colombo His Eminence Malcolm Cardinal Ranjith has given a "STRONG MESSAGE" that Current political leaders must retire to make way for new leadership which should "ALSO" be heard by all Muslims in Sri Lanka, Muslim politicians, Muslim political party leaders and, Muslim Civil Society Organization leaders and the All Ceylon Jamiyathul Ulema, Insha Allah. RAUF HAKEEM SHOULD STEP DOWN AND HAND OVER THE PARTY TO THE YOUNG "PORAALIGALS". Changes are happening in other parties and it can also happen in the SLMC, Insha Allah.
    THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING SINCE JUNE 2014, THAT IT IS TIME UP A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN', HONEST AND DILIGENT MUSLIM POLITICIANS FREE FROM ANY FORM OF CORRUPTION, WHO COULD STAND UP TO DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. Let Muslims who are WISE and who REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS SHOULD UNITE TO BRING ABOUT A CHANGE. The MUSLIMS SHOULD NOT recognize the present MUSLIM PARTY LEASERS AND POLITICIANS who have been causing more and more harm than good to the Sri Lanka Muslim Community. Muslims who REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS should also come forward INDEPENDENTLY, form INDEPENDENT GROUPS as the "NEW POLITICAL FORCE" and contest all elections in the future, Insha Allah. ANY OTHER SUGGESTIONS SHOULD ALSO BE DELIBERATED. IT IS TIME UP THE MUSLIM COMMUNITY GET PREPARED FOR THESE CHALLENGES, INSHA ALLAH.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. This article failed to look at the situation from JVP’s perspective.

    ReplyDelete

Powered by Blogger.