Header Ads



"செயற்குழுவில் இணக்கப்பாடு இல்லாவிடின், வாக்கெடுப்பின் மூலம் வேட்பாளர் தெரிவு"

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரையும், பிரதித்தலைவரையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகங்கொடுப்போம்.

நாளை அல்லது நாளை மறுதினம் எமது கட்சியின் செயற்குழுவின் ஊடாக வேட்பாளரை பெயரிடுவோம். செயற்குழுவில் அனைவரினதும் இணக்கத்தை பெற்றுக்கொள்ள முயற்சிப்போம். முடியாவிடின் வாக்கெடுப்புக்கு செல்ல நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் இன்று -24- நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.