Header Ads



ஜனாதிபதிக்கு எதிராக இன்று, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

இலங்கை தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை சவாலுக்கு உட்படுத்தி தம்பர அமில தேரர் மற்றும் பேராசிரியர் சந்தரகுப்தா தேனுவர ஆகியோர் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் படி மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன மாத்திரமே ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும் அவர்கள் தமது மனுவில் கூறியுள்ளனர்.

இதனால், ஊடகத்துறை அமைச்சின் கீழ் வரும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை தனது அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளதன் மூலம ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார் என உத்தரவிடுமாறு மனுதார்கள், உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.