தமிழ் தேசியக் கூட்டமைப்பை, இன்று சந்திக்கிறார் ரணில்
அதிபர் தேர்தல் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று -17- பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின் போது, வரும் அதிபர் தேர்தலில் ஐதேக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைக்கப்பட வேண்டிய நிபந்தனைகள், கோரிக்கைகள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment