வீதி ஒழுங்கு தெரியாத சஜித், எவ்வாறு நாட்டை ஒழுங்காக உருவாக்க முடியும்..?
ஜே.வி.பியின் ஆதரவில்லாது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க முடியாதெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, வீதி ஒழுங்கு தெரியாத அமைச்சர் சஜித்தால் நாட்டை எவ்வாறுக் கட்டியெழுப்ப முடியும் எனவும் வினவியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலான ஊருக்கு அமைச்சர் சஜித் பஸ் ஒன்றை வழங்கி அதனை அவரே ஓட்டிச் செல்வதையும் பார்க்க முடிந்தது. வீதி ஒழுங்கு தெரியாத ஒருவர் எவ்வாறு நாட்டை ஒழுங்காக உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
டிஎன்ஏ யின் தலைவர் சம்பந்தன் ஐயாவுடனான நேர்காணலின்போது இந்த சஜித் யார் என்பது சரியாகபொது மக்களுக்குப்புரிந்தது. முழு இலங்கையையும் ஹம்பாந்தோட்டையில் உள்ளடக்கலாம் என்பது அவருடைய குடிசனக்கோட்பாடு.
ReplyDelete