Header Ads



கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீனவர்களுக்கு எச்சரிக்கை


நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் ஆழ்கடல் மீனவர்ளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, பலப்பிட்டிய, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.