Header Ads



சஜித்திற்கு ஆதரவு தெரிவிக்க, எமது கட்சி ஆர்வத்துடன் இருக்கிறது - ஹக்கீம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல்யமான உறுப்பினருக்கே தாம் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பிரபல்யமான உறுப்பினர் யார் என ஊடகவியலாளர்கள் வினவியபோது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கே தமது கட்சி அதிக ஆர்வத்துடன் இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கட்சியில் பிரபல்யம் இருக்கின்றதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதில் பிரச்சினை உள்ளது எனவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன்போது கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.