Header Ads



ஒரு சர்வாதிகாரியை ஜனாதிபதியாக உயர்த்துவதற்கு, சுதந்திரக் கட்சி தயாராக இல்லை

ஒரு சர்வாதிகாரியை நாட்டின் அதிபராக உயர்த்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இல்லை என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

“வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுக்களை நடத்தி வருகிறது.

ஆனாலும், அதில் இணைந்து கொள்வதற்கு கண்மூடித்தனமாக ஒப்புக்கொள்ளமாட்டோம்.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு, சுதந்திரக் கட்சி கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

பொதுஜன பெரமுனவிடம் ஒருபோதும், சுதந்திரக் கட்சி மண்டியிடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.