Header Ads



'ஆடை அணிந்துகொண்டா, ரணில் பேசுகிறார்?' பரபரப்பு தகவல்களுடன் மைத்திரி பேச்சு

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கும் விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு நான் அழைப்பு விடுத்ததாக ரணில் ஆடைகளை அணிந்து கொண்டா கூறுகிறார்.?”

இவ்வாறு கேள்வியெழுப்பினார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.மாத்தளையில் இன்று - 21- நடைபெற்ற கட்சியின் சம்மேளனத்தின் போது உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ,

நாட்டு மக்கள் என் என்னை ஜனாதிபதியாக நியமித்தனர்? நாட்டுக்கு ஜனநாயகம் தேவை என்றே அவர்கள் நியமித்தனர். ஊழல் ,வன்முறை ஆட்சி இருந்தபடியால் நான் ஜனநாயகத்தை நிலைநாட்டி வாழும் உரிமையை ஏற்படுத்தினேன்.

ஆனால் ரணில் தனி பயணம் ஒன்றை ஆரம்பித்தார் . கடந்த அரசை விட மோசமான ஊழல் செய்தார்.மத்திய வங்கி ஊழல் அதில் ஒன்று.மேலைத்தேய தேவைக்கேற்ப அவர் நாட்டை ஆட்சி செய்தார்.மின்சாரகதிரை ,வெளிநாட்டு தலையீடு ,இராணுவத்தினருக்கு தண்டனை என்ற கோஷங்களை நான் எனது ஆட்சியில் நிறுத்தினேன். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமார் முப்படைகளின் பலத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகங்களை செய்தனர். மூன்று மாதம் எனது பதவிக்காலம் முடியவிருக்கும் சூழ்நிலையில் இதுவரை நான் அப்படி எதனையும் செய்ததில்லை.

நாட்டுக்காக அரசியல் செய்வது யார்?தனக்காக அரசியல் செய்வது யார் ?என்பது இப்போது உங்களுக்கு தெரியும்.இதனால் தான் நாட்டில் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது.கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை வைத்து இந்த ஜனாதிபதி தேர்தலை ஒப்பிட முடியாது.நான் அரசின் ஊழல்களை பேசியபோது அது எதிர்க்கட்சியின் வாக்குகள் கிடைக்க ஏதுவானது .சுதந்திரக்கட்சியை குழிதோண்டி புதைக்க முடியாது.பெட்டிக்குள் வைத்து ஆணியடிக்க முடியாது.நாம் ஒரு சுத்தமான கட்சி .அடுத்த தேர்தலில் யார் ஜனாதிபதியானாலும் அவரை அந்த இடத்திற்கு கொண்டுவருவதில் எமது கட்சியே முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கும்.

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து பல மட்டங்களில் விசாரணைகள் நடக்கின்றன.பாராளுமன்ற தெரிவுக்குழு என்னிடம் ஆலோசனைகள் கேட்டிருந்தது.நான் அதற்கு கடப்பட்டு இல்லாத ஒருவர். அதனால் நான் விரும்பினால் அதனை செய்யலாம் என்று சட்ட மா அதிபர் கூறினார்.ஆனால் நான் ஜனநாயகத்தை செய்தேன்.நான் அதனை ஊடகத்திற்கு வழங்க அனுமதி கேட்டேன்.நாட்டுக்கு அதனை சொல்ல முயன்றேன்.ஆனால் தெரிவுக்குழு அதனை அனுமதிக்கவில்லை.அது ஏன் என்று தெரியவில்லை.நான் அந்த தாக்குதல்கள் குறித்து உண்மைகளை கூறினேன்.நான் ஊடகங்களை அனுமதிக்க கோரினாலும் தெரிவுக்குழு அதனை அனுமதிக்கவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கும் விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு நான் அழைப்பு விடுத்ததாக ரணில் ஆடைகளை அணிந்து கொண்டா கூறுகிறார்.?ரவி கருணாநாயக்க எம் பி என்னை தொடர்புகொண்டு அமைச்சரவையை கூட்ட கோரினார் .நான் அதனை பிரதமரே செய்யவேண்டுமென கூறினேன்.பின்னர் நானே தொலைபேசி அழைப்பை எடுத்து கேட்டபோது அமைச்சரவையை கூட்டுமாறு பிரதமர் கோரினார்.அமைச்சரவை பத்திரத்தை அவசர அவசரமாக தயாரித்து பின்னர் அதனை அமைச்சரவைக்கு வழங்கவேண்டாமென அமைச்சரவை செயலாளரிடம் அவர் சொல்வதையும் நான் இரகசியமாக கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.இதெல்லாம் செய்துவிட்டு நான் இதனை ஏற்பாடு செய்ததாக கூறுகிறார்.பின்னர் அமைச்சரவையில் அவர் பேச ஆரம்பித்ததும் அவரது அமைச்சர்களே எதிராக பேச ஆரம்பித்தனர்.இது கட்சிப் பிரச்சினை என்று கூறி நான் அவர்களை அனுப்பி வைத்தேன்.இப்போது நான் கூட்டியதாக கூறுகிறார்.அமைச்சரவை கூட்டி பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்றி சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.அதனை நான் அறிவிக்க வேண்டும். சர்வசன வாக்கெடுப்பு நடத்தியும் அதனை செய்யலாமா என்பதனை பார்க்க வேண்டும்.ஆனால் நான் கொள்கையளவில் இந்த நிறைவேற்று அதிகார பதவி நீக்கத்தை ஆதரிக்கிறேன்.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் தில்ருக்ஷி பேசிய உரையாடல் ஒன்று இப்போது உலவுகிறது.அவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கோரி பிரதமர் சில மாதங்களுக்கு முன்னர் எனக்கு கடிதம் அனுப்பினார்.ஆணையாளர் தில்ருக்ஷி காலையில் தனது அலுவலகத்திலும் மாலையில் அலரி மாளிகையிலும் இருந்தார்.அது எனக்கு தெரியும்.மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி இப்போதாவது அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கியவர்களை வெளிப்படுத்த வேண்டும்.அதுதான் நாட்டுக்கும் நல்லது.அரசியல் பலத்தை பயன்படுத்தி ரணில் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை இது வெளிப்படுத்துகிறது.இந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் நடந்துள்ளது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். – என்றார் மைத்ரி Tamilan

No comments

Powered by Blogger.