ஜனாதிபதி முறைமையை, ஒழிப்பது தேசத் துரோகம் - அத்துரலிய தேரர்
ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க யாரேனும் செயற்பட்டால் அது தேசத்திற்கு எதிராக செய்யும் துரோகமாகும் என அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் ஊடாகத் தான் நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுவதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் விசேட அமைச்சரவைக் கூட்டத்தினை ஏற்பாடு செய்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
dc
ஜனாதிபதி முறையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் முற்றாக ஒழிக்கப்படல் வேண்டும்
ReplyDeleteஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டால் அது தமிழ் பயங்கரவாதிகளுக்கே சாதகமாகும். ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதாக இருந்தால் மாகாண சபை முறைமை உடனடியாக ஒழிக்கபட வேண்டும். மாகாண சபைகள் இலங்கைக்கு தேவையற்றவை
ReplyDelete