Header Ads



சஜித் பிரேமதாச இன்னும் 89 களில் வாழ்ந்து வருகிறார் - சுதர்ஷனி Mp குற்றச்சாட்டு

2020 இல் ஜனாதிபதியாகும் தகுதியுள்ள ஒரு வேட்பாளரேனும் ஐக்கிய தேசிய கட்சியினுள் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

கட்டான பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் எவ்வாறான கருத்துக்களை தெரிவித்தாலும், மக்கள் பொதுஜன பெரமுனவுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சி தற்போது எவ்வித தீர்மானங்களையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், யார் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டாலும் 2020 க்கு ஏற்ற எந்த தலைவரும் அவர்களிடம் இல்லை என தெரிவித்தார். 

அதேபோல், சஜித் பிரேமதாச இன்னும் 89 - களில் வாழ்ந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.