Header Ads



6 வயது அன்சாப், வாகன விபத்தில் மரணம் - திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வருகையில் சம்பவம்


ஏறாவூர் ஜிப்ரி தைக்கா வீதியை அண்டி வசிக்கும் 6 வயதுச் சிறுவன் வீதி விபத்தில் சிக்கி உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி மாநகர சபைக்கு முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை -22- அதிகாலை நடந்த இவ்விபத்துச் சம்பவத்தில் பலியான அன்சார் அன்சாப் (வயது) என்பவரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் இடம்பெற்ற தமது உறவினரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு ஏறாவூர் நோக்கி வேன் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தபோது  வேகமாக பயணித்த ரேஸிங் கார் வேன் மீது மோதியதில் வேனில் உறக்க நிலையில் இருந்த சிறுவன் தூக்கி வீசப்பட்டதில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்தில் வேனில் பயணம் செய்த மற்றைய எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.