Header Ads



வழிபாட்டிற்கு சென்றவர்கள், மீது தாக்குதல் - 5 பேர் படுகாயம்

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பாசிக்குடா சுனாமி வீட்டுத் திட்ட கிராமத்தில் நேற்று காலை வழிபாட்டிற்கு சென்றவர்களை குழுவொன்று வழிமறித்து தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டினை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை வழக்கம் போல் வழிபாட்டு சென்றவர்களை வழியில் இடைமறித்து பிரதேசத்தின் கும்பல் ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.