Header Ads



சர்வதேசப் போட்டியில் பங்குகொள்ளும், மாவனல்லை ஸாஹிராவின் 2 மாணவர்கள்


ஸாஹிரா தேசிய கல்லூரியில் தரம் 06 மற்றும் 10 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களான M.S.  முஸ்அப் ஷாமில்,  மற்றும்   அஹமத் பவ்ஸ் ஆகிய இருவரும் ''முஆய் தாய்'' எனப் பிரபல்யமடைந்துள்ள Kickboxing சர்வதேசப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

தெல்கஹகொட மற்றும் மாவனல்லைப் பிரதேங்களைச் சேர்ந்த இவர்கள் மாவட்ட மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களைப் பெற்று தற்போது International Federation of Muaythai Amateur (IFMA)  வினால் நடாத்தப்படும் YOUTH  WORLD  CHAMPIONSHIPS 2019   என்ற சர்வதேச போட்டியில் பங்குபற்றுவதற்காக துருக்கிய நாட்டின் அன்டாலியா நகருக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி பயணிக்கத் தயாராக இருக்கிறார்கள். இவற்றில் இலங்கையிலிருந்து 18 மாணவர்கள் உற்பட உலகில் பல்வேறு நாடுகளிருந்தும் பல போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர். 

விளையாட்டு அமைச்சுக்குக் அங்கீகாரத்துடன் செயற்படும் இலங்கை முஆய் தாய் சங்கத்தின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும்  ஐசழn ஆயசவயைட யுசவள யுளளழஉயைவழைn ( ஐஆயு)  என்ற கழகத்தின் வீரர்களான இவர்கள் மாஸ்டர் ஆ.ர்.ஆ பாஹித் (மடவலை) அவர்களின் வழிகாட்டலில் பயிற்சியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இரு வீரர்களும் இப்போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி நாட்டுக்காக பதக்கங்களைப் பெற்று உலக அளவில் எமது நாட்டுக்கான புகழையும், தான் கற்கும் பாடசாலை, ஊர் மற்றும் கழகத்துக்கான புகழையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு போட்டியை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளனர்.

அவர்களின் இலக்கை அடைய எமது பிராத்தனைகள்.



2 comments:

  1. Congratulation to both Zahirians and other 16 pupils. Bring glory to our motherland, wish you all good luck

    ReplyDelete
  2. Include our master's name and our association name

    ReplyDelete

Powered by Blogger.