Header Ads



இன்றைய அரசியல் சிக்கலுக்கு, அஷ்ரபின் 2 வித்தியாசமான சமன்பாடுகள்

சமன்பாடு - 01:-

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப காலகட்டத்தில் - ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேறூன்றி விடக்கூடாது என்பதற்காக - பல்வேறு நெருக்குவாரங்களையும் அதிகார அடக்குமுறைகளையும் - ஐக்கிய தேசிய கட்சி பயன்படுத்தியது. அதனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்பில் பெரும் அதிருப்தி இருந்தது. ஐக்கிய தேசிய கட்சியை பரம எதிரியாக வரித்துக்கொண்டனர்.

ஆனால், 1988 ஜனாதிபதி தேர்தல் வந்த போது - ஶ்ரீமாவோ பண்டாரநாயகவோடு நடந்த பேச்சுவார்த்தைகள் சாதமில்லாமல் போன சந்தர்ப்பத்தில் - அஷ்ரப், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பிரேமதாசவை ஆதரிக்க அவரிடம் வைத்த வேண்டுகோள்களை - அவர் ஏற்றுக்கொண்டு அமுல்படுத்த முன்வந்த போது - அத்தேர்தலில் அவர் பிரேமதாசவையே ஆதரிக்க வேண்டி வந்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் மீது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்புணர்வை உள்வாங்கிய அஷ்ரப் - அந்த தேர்தலில் பிரேமதாசவை ஆதரிக்கும் தனது நிலைப்பாட்டை;

👉🏿 "ஐக்கிய தேசிய கட்சியையும், அதன் வேட்பாளர் ரணசிங்க பிரேமதாச என்ற தனிநபரையும் நான் வேறுபடுத்தி பார்க்கிறேன். நீங்களும் அவ்வாறே பாருங்கள்"

என்று கூறி - அந்த தேர்தலில் கட்சியை விட அதன் வேட்பாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையை உருவாக்கி - பிரேமதாசவை ஆதரித்து வெல்லவைத்து ஜனாதிபதியாக்கினார்.

✍🏿 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜீத் பிரேமதாச அறிவிக்கப்பட்டால் - பிரதமர் ரணில் மீதும் ஐக்கிய தேசிய கட்சி மீதும் முஸ்லிம்களுக்கு இருக்கும் அதிருப்திக்கான விடையாக - அஷ்ரபின் இந்த அனுகுமுறை அமையும். கட்சியின் நிலைப்பாட்டின் நியாயமாகவும் அமையும்.

சமன்பாடு - 02:-

1988 ஆம் ஆண்டில் ஶ்ரீமாவோ பண்டாரநாயகவை தேற்கடித்து பிரேமதாசவை ஜனாதிபதியாக்க மடித்துக்கட்டிக்கொண்டு நின்ற அதே அஷ்ரப் - 1994 ஆம் ஆண்டு; அதாவது 6 வருடங்களுக்குள் - அதே ஶ்ரீமாவோ பண்டாரநாயகவின் மகள் சந்திரிகாவை வெல்ல வைக்க - ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மடித்துக்கட்டிக்கொண்டு நின்றார்.

✍🏿 அதாவது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனாதிபதி வேட்பாளரைத்தான் ஆதரிக்க வேண்டுமென்றில்லை; மாறாக,

"அம்மாவை (ஶ்ரீமா) தோற்கடித்து மகளை (சந்திரிகா) வெல்ல வைத்த அஷ்ரபின் அனுகுமுறையின் வழியில் - அண்ணனை (மகிந்த) தோற்கடித்து தம்பியை (கோட்டா) வெல்ல வைக்கும் நிலைக்கு வருவதையும்'' 
அஷ்ரப் அன்றே காட்டி தந்திருக்கிறார் என்ற விடயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

👉🏿 இன்னும் விரிவாக கூறினால், "அரசியலில் நிரந்தரமான எதிரியுமில்லை; நிரந்தரமான நண்பனுமில்லை" என்பதை அஷ்ரப் நடைமுறையில் காட்டியிருக்கிறார்.

👉🏿 "ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கையாள தெரியாமல் தவறுவிட்டவர்களுக்கு; பாடம் கற்பிக்க வேண்டிய தேவை நமக்கிருப்பதால்; இந்தத் தேர்தலில் நாம் சந்திரிக்காவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்" என்று இந்த நிலைப்பாட்டை அஷ்ரப் விபரித்தார்.

✍🏿 அதேவழியில், முஸ்லிம்களின் விவகாரங்களை சரியாக கையாள தவறி விட்டவர்களுக்கு; பாடம் கற்பிக்க வேண்டிய தேவை நமக்கிருப்பதால்; இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்நிலைப்பாடு எடுக்க வேண்டி தேவை வந்ததை முஸ்லிம் காங்கிரஸ் தாராளமாக முன்வைக்கலாம்.

இவை அஷ்ரப் இன்றைய சிக்கல்களுக்கு போட்டுத்தந்துவிட்டு போன அரசியல் சமன்பாடுகள்.

புரிந்தவன் பிஸ்தா.

ஏ.எல். தவம்

2 comments:

  1. முஸ்லீம் என்ற வார்த்தையோடு கட்சியை ஆரம்பித்து அல்லாஹ்வையும் ரஸூலையும் விற்று அரசியல் செய்து கடைசில் முஸ்லீம் சமூகத்தையே அகதிகள் ஆக்கி அதட்க்குண்டான விலையை கொடுத்தார்.

    ReplyDelete
  2. IPPOLUDU ULLA POLITHALAIVAN
    MUSLIMGALIN VAAĶKUKALAI

    VITRU PILAIPPAVAN.
    MUSLIMGALUKKU IVANTHAAN
    MUTHALAAVAZU THUROKI.

    ReplyDelete

Powered by Blogger.