பேஸ்புக்கில் அறிமுகமான பெண், ஆணிடமிருந்து 24 இலட்சத்தை மிரட்டி கப்பம் பெற்றார்
பேஸ்புக் ஊடாக அறிமுகமான பெண்ணொருவர், நபரொருவரிடம் 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கப்பமாக பெற்ற சம்பவம் தொடர்பில் பெண்ணொருவரும், ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபருடன் தொடர்பு கொண்டிருந்த வேளை, எடுக்கப்பட்ட நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி குறித்த பெண் இவ்வாறு கப்பமாக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணும், மற்றைய நபரும் பல முறை குறித்த நபரிடம் அச்சுறுத்தி பணம் பெற்றுக்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
28 வயதான குறித்த பெண், இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவருடன், 28 வயதான மற்றைய நபர், மொரட்டுவை பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்றைய தினம் -21- கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Post a Comment