ஜனாதிபதியை தவறாக வழிநடத்தி 200 கோடி, மோசடி என கூறவைத்தமை பெரிய கரும்புள்ளி ஆகும்
தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதில் 200 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஜனாதிபதி கூறியமையானது, அவரை தவறாக வழிநடத்த யாரோ செய்த சதியாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதனால், அது குறித்து விசாரிக்க சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறும் அவர் ஜனாதிபதியிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் பெற வேண்டும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த பாரதூரமான குற்றச்சாட்டு காரணமாக இலங்கை மற்றும் சீனா அரசின் அபிமானத்திற்கு பெரிய கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனா அரசிடம் இருந்து தெளிவுப்படுத்தலை எதிர்பார்த்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச இது சம்பந்தமாக இன்று விசேட அறிக்கையை வெளியிட உள்ளார்.
இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுச பெல்பிட் தனது பேஸ்புக்கில் இது சம்பந்தமான உண்மை நிலைமையை தெளிவுப்படுத்தியுள்ளார் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment