நவம்பர் 15, வெள்ளிக்கிழமை ஜனாதிபதித் தேர்தலா...? ஆணைக்குழு எதிர்வு கூறியது
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ள திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்று -17-எதிர்வுகூறியது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழு இன்று அழைத்திருந்தது.
இதன்போது, ஜனாதிபதித் தேர்தல் பெரும்பாலும் நவம்பர் 15ஆம் திகதி நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழு அறிவித்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டார்.
வேறொரு நாட்டில் பிரஜாவுரிமை இருந்தால், அந்நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தெளிவாகக் கூறப்பட்டதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கூறினார்.
Post a Comment