Header Ads



கோட்டா VS சஜீத் - ஒரு ஒப்பீடு

👉🏿கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த 57,680,00 (47%) வாக்குகளைப் பெற்ற அதே சந்தர்ப்பத்தில் மைத்ரி 62,17,000 (51%) வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றார்.

👉🏿இதில் 58% மான சிங்களர்களின் வாக்குகளை மகிந்தவும், 41% மான சிங்களவர்களின் வாக்குகளை மைத்ரியும் பெற்றிருந்தனர்.

👉🏿சிறுபான்மை இனத்தவரை பொறுத்தவரை, அவர்களின் வாக்குகளில் 84% மானவை மைத்ரிக்கும் 15% மான வாக்குகள் மகிந்தவிற்குமளிக்கப்பட்டிருந்தன.

👉🏿மகிந்த 10 தேர்தல் மாவட்டங்களில் வெற்றி பெற்றிருந்தார். அவற்றில் எதுவும் தேர்தல் முடிவுகளில் பெருமளவில் தாக்கம் செலுத்துமளவு சிறுபான்மையினரை கொண்ட மாவட்டங்களாக இருக்கவில்லை. அவையாவன; 
அனுராதபுரம், காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, குருநாகல் , மாத்தறை, மொனறாகலை , இரத்னபுரி, மாத்தளை

👉🏿அதேநேரம், மைத்ரி 12 மாவட்டங்களில் வென்றிருந்தார். அவற்றில் பொலன்னறுவை மற்றும் கம்பஹா மாவட்டங்கள் மாத்திரம் சிங்களவர்களை அதிகம் கொண்ட பிரதேசங்களாகும். மீதி 10 மாவட்டங்களிலும் சிறுபான்மையினர் தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மாவட்டங்களாக அமைந்திருந்தன. அவையாவன;
கொழும்பு, கண்டி , நுவரேலியா, புத்தளம், பதுளை, அம்பாரை (திகாமடுல்ல), மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம்

✋️✋️✋️இந்த தேர்தல் முடிவுகளை வைத்து, SLPP (மகிந்த அணி) வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்‌ஷவையும் - DNF (ஐக்கிய தேசிய கட்சி அணி) வேட்பாளராக சஜீத்தையும் ஒப்பிட்டு பார்ப்போம்✋️✋️✋️

👍கடந்த தேர்தலில் மகிந்தவால் வடக்கில் (Deep North) ஊடுருவ முடிந்திருக்கவில்லை. இந்த தேர்தலில் கோட்டாவாலும் ஊடுருவ முடியுமானதாக இருக்காது. எனவே வடக்கு வாக்குகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வழியில்லை. கோட்டா வேட்பாளர் எனும் போது அவரை தோற்கடித்தே ஆகவேண்டுமென்ற வன்மம் கடந்த தேர்தலை விடவும் அதிகரிக்கலாம். அதனால், வாக்களிப்பு வீதம் அதிகரிக்கலாம். ஏனெனில், யுத்தத்தில் மிகமோசமாக தமிழர்களை கையாண்டவர் அவரே என்ற மனப்பதிவு வடக்கு தமிழர்களிடம் ஆழமாகவுள்ளது. அதனால் சஜீத்திற்கு இது சாதகமாக அமைவதோடு, ஐக்கிய தேசிய முன்னணிக்கு கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படாது என்பதை அறியலாம்.

👍அதேநேரம், கடந்த தேர்தலில் மகிந்தவின் கோட்டையாக இருந்தது தென்மாகாணமே (Deep South). அதாவது, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களே. அங்கு மைத்ரியின் பலவீனம் வெளிப்படையாகவே தெரிந்தது. அது மிகப்பெரும் பலமாக மகிந்தவிற்கு அமைந்திருந்தது. ஆனால், சஜீத் வேட்பாளராக வரும்பட்சத்தில் அவருடைய தேர்தல் மாவட்டமும் தெற்கில் இருப்பதால், மிக இலகுவாக ஊடுருவி வேலை செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

👍இது மகிந்த முகங்கொள்ளாத, கோட்டா முகங்கொள்ள வேண்டிய மிகப்பெரும் சவாலாக அமையும். இதனால், SLPP தனது மிகப்பலமான தளத்தில் (Strong hold) வீழ்ச்சியை சந்திக்கும். அல்லது சஜீத்திடம் குறிப்பிடத்தக்க ஆதரவு பலத்தை இழக்க நேரிடும். இது மகிந்த கடந்த தேர்தலில் தோற்கின்ற நிலையிலும் பாரியளவில் தோற்கவிடாமல் தடுத்த சிங்கள வாக்குகளில் பெரும்பங்கு வாக்குகளை கோட்டா இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளும். சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி களமிறங்கும் போது அடித்தளமே ஆட்டம் காணுகின்ற நிலையை உருவாக்கும்.

👍அது ஒருபுறமிருக்க, கடந்த தேர்தலில் மகிந்தவை பௌத்த மத காவலனாகவும் மைத்ரியை மேற்கத்தியத்தின் ஏஜென்டாகவும் பார்த்த சிங்கள கடும்போக்குவாதிகள், சஜீத் வேட்பாளராக வருகின்ற நிலையில் அந்த மனப்பதிவிலிருந்து விடுபட அல்லது அமைதியடைய வேண்டிய நிலைக்கு வருவர். ஏன்எனில், சஜீத் மீது மட்டுமல்ல அவரது தந்தை பிரேமதாச மீதும் சிங்கள பௌத கடும்பார்வை என்றும் திரும்பியதில்லை என்பதே வரலாறு. எனவே, கோட்டாவிற்கு பௌத்த கடும்போக்குவாத முன்தள்ளு வாக்குகள், மகிந்தவிற்கு கிடைத்ததை போன்று கிடைக்காது என்பதை இப்போதே அவதானிக்கலாம்.

👍சிறுபான்மையை பொறுத்தவரை, ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு பின்னர் முஸ்லிம்களின் உடமை, உயிர், வர்த்தக மையங்கள், மதஸ்தலங்கள் என்பவற்றின் மீதான தாக்குதலின் பின்னணியிலும், முஸ்லிம் விரோத பிரச்சாரத்தின் பின்னணியிலும் மகிந்த அணியின் கை நேரடியாகவும் மறைமுகமாகவுமிருந்த விடயம் தொடர்பில் SLPP யின் வேட்பாளரை ஆதரிக்க முனைய மாட்டார்கள். அதே நேரம், கோட்டாவின் பௌத்த கடும்போக்குவாத பின்னணி மற்றும் இராணுவ கையோங்கல் நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு அந்தப்புறம் திரும்பி பார்க்காத மனநிலையில் இருப்பார்கள்.

👍தமிழர்களை பொறுத்தவரை அன்மைக்காலமாக அதிகரித்துவரும், இந்து கோயில்களை தகர்த்தல், தமிழர் மரபுவழி நிலத்தில் விகாரை அமைத்தல், கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் அத்துமீறி சிலை நிறுவுதல் என்பவை தொடர்பில் மிகவெறுப்புற்ற நிலையில் இருக்கிறார்கள். இது வடக்கிலிருந்து மலையகம் வரை பரவியுள்ளதை நாம் அறிவோம். இந்நிலை கோட்டா ஜனாதிபதியானால் இன்னும் அதிகரிக்கும் என்ற மனப்பதிவு பரவலாக இருப்பதையும் நாம் அறியலாம்.

👍மேலும், கோட்டாவும் மகிந்த அணியும் அதிகாரப்பரவலாக்கத்திற்கு எதிரானவர்கள் என்பதும், இலங்கையில் சிங்கள மக்கள்தான் முன்னுரிமையுடையவர்கள் மற்றவர்கள் தங்கி இருப்போரே என்ற கருதுகோளுடையவர்கள் என்பதால் வட - கிழக்கு தமிழர்கள் கோட்டாவை விரும்பவே விரும்ப மாட்டார்கள்.

இவ்வாறான காரணங்களை கோர்த்துப் பார்க்கும்போது; 
👉🏿கடந்த தேர்தலில் மகிந்தவிற்கு எதிராக அளிக்கப்பட்ட சிறுபான்மை வாக்குகள் கோட்டாவிற்கு ஆதரவாக அளிக்கப்படாத நிலையில்
👉🏿கடந்த தேர்தலில் மகிந்தவிற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட சிங்கள வாக்குகள் சஜீத்திற்கும் பெருமளவில் பங்கிடப்படுகின்ற நிலையில்
👉🏿சிங்கள கடுப்போக்குவாதிகள் சஜீத்தின் வருகையால் அமைதியாக்கப்படுகின்ற நிலையில்

கடந்த தேர்தலில் மகிந்த பெற்ற 58% சிங்கள வாக்குகளில் 10% (5,00,000) வீதத்தை மட்டும் சஜீத் உடைத்தாலும் கோட்டாவை மண்கவ்வ செய்யலாம் என்பது நிரூபனமாகிறது.

ஏன் 10% என இங்கு கூறப்படுகிறது எனில், கடந்த தேர்தலில் சிறுபான்மையினரால் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஒரு 5,00,000 குறைந்தாலும் - அதனை ஈடுசெய்ய 10% சிங்கள வாக்குகளை உடைக்கும் இயலுமை சஜீத்திடமிருக்கின்றது என்பதை காட்டுவதற்கேயாகும்.

ஆனால் என்ன? சஜீத் வேட்பாளர் ஆக வேண்டுமே. 

ஏ.எல். தவம்

3 comments:

  1. A good comparison and yet, we should not forget that there are a good numbers of support for Mahinda family among all forces as well. Moreover, this time if MS is with Goata, he could increase his vote bank little bit. But, one of negative picture of Mahinda family is the corruption, People know that Mahinda family looted public money from Tsunami to Chinese contracts. But Sajith never looted public money. His father too did not do that... Moreover, some people crossed over from SLFP and SLPP to UNP now.. so, there is more support for this as well. Moreover, Goata has not have any political experience as well. so people would not trust him. The caste system too will play a role in this election. that is another factor. But, 90% of Tamils will go with Sajth..that is true if they want...

    ReplyDelete
  2. Good review make sense.

    ReplyDelete
  3. கோத்தா வெற்றி பெற்றாலும் பரவாயில்லை.ஆனால் சஜித்தை களமிதக்க கூடாது எனும் நிலைப்பாட்டில் உள்ளார் ரனில்.அதனால்தான் ரனில் தான் எதுவும் பன்னாமல் தனது மிக நெருங்கிய சகாவான ரவி யை வைத்து சஜித்தை ஓரம் கட்டும் மூயர்ச்சியில் ஈடுபடுகிறார்.ஏனெனில் ஒரு வேளை சஜித் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் தனது தலைமை பதவிக்கு அப்பாக அமைந்துவிடும் எனவே ஜனாதிபதியாக யார் வந்தாலும் பரவாயில்லை UNP யின் தலைவராக தான் சாகும் வரை இருக்க வேண்டும் எனும் திட்டத்தில் உள்ளார்.எனவே சஜித்தை தவிர வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் யாரும் அங்கே இல்லை.ஆனால் ரனில் சஜித்துக்கு கொடுப்பார் என்பதுதான் மிகப் பெரும் கேல்வி.

    ReplyDelete

Powered by Blogger.