தேசியப் பட்டியல் மூலம் Mp ஆகிறார் ஜகத் புஷ்பகுமார..?
பாராளுமன்ற உறுப்பினர் சாந்தபண்டார தமது தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அந்த இடத்திற்கு மொனராகலை மாவட்ட முன்னாள் எம் பி ஜகத் புஷ்பகுமார நியமிக்கப்படுவாரென அறியமுடிந்தது.
குருநாகல் எம் பி சாலிந்த திசாநாயக்க காலமானதையடுத்து அதற்கு அடுத்தபடியாக பட்டியலில் சாந்த பண்டார இருப்பதால் அவர் தேசியப்பட்டியலை ராஜினாமா செய்து மாவட்டத்தில் இருந்து எம் பியாகிறார்.
அப்போது வெற்றிடமாகும் தேசியப்பட்டியலுக்கே முன்னாள் எம் பி ஜகத் புஷ்பகுமார நியமிக்கப்படவுள்ளாரென சொல்லப்படுகிறது.
இதேவேளை இந்த வெற்றிடத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை நியமிக்குமாறும் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.
Post a Comment