Mp களின் மேசையில் வைக்கப்பட்டிருக்கும் லெப்டொப்களை, விரும்பம் இல்லாதவர்கள ஒதுக்கிக்கொள்ளலாம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் மேசையின் மேல் வைக்கப்பட்டிருக்கும் மடிக்கணணிகள் சீன பாராளுமன்றத்தால் நன்கொடையாக கிடைக்கப்பெற்றதாகும். விரும்பம் இல்லாதவர்கள் அதனை ஒதுக்கிக்கொள்ளலாம் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் நான்ஸா ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையில், நாட்டில் இருக்கும் நிறுவனங்களில் பாராளுமன்றமே மிகவும் மோசமான நிறுவனம் என பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ் கடந்த 30ஆம் திகதி தெரிவித்திருந்தார். அவர் இவ்வாறு தெரிவித்தது, பாராளுமன்ற உறுப்பினர்களின் மேசையில் புதிதாக வைக்கப்பட்டிருக்கும் மடிக்கணணியை அடிப்படையாகக்கொண்டாகும். இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சமாகவே வழங்கப்படுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ்வின் இந்த கூற்றானது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் கெளரவத்துக்கு பாதிப்பாகும். அதனால் இந்த மடிக்கணனிகள் பாராளுமன்ற செலவுத்தலைபில் வழங்கப்படிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு இல்லை என்றால் அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதன் உண்மை தன்மையை சபைக்கு அறிவிக்கவேண்டும் என்றார்.
இதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
Post a Comment