Dr ஷாபிக்கு எதிரான வழக்கு, டிசம்பருக்கு ஒத்திவைப்பு
குருநாகல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நான்காவது முறையாக இந்த வழக்கு இன்று -09- விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அசாதாரணமான முறையில் சொத்து சேகரித்தமை மற்றும் சட்டவிரோதமான முறையில் கருத்தடைகளை மேற்கொண்டதா இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 10 மணியளவில் வைத்தியர் ஷாபி நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் 12 பக்கங்களை கொண்ட அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
விடயங்களை ஆராய்ந்து பார்ப்பதற்காக வழக்கு விசாரணைகள் டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Post a Comment