குருணாகல் வைத்தியசாலை பிரதி பணிப்பாளரினால், ஷாபி விவகாரத்தில், CID அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல்
( எம்.எப்.எம்.பஸீர் )
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் பிரிவின் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஈ.எஸ்.திஸேராவிற்கு குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளரினால் பாரிய உயிர் அச்சுறுத்தல் நிலவுவவதாக சி.ஐ.டி குருணாகல் பிரதான நீதிவானுக்கு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சி.ஐ. டி பணிப்பாளர் ஊடாக விஷேட விசாரணைகளை முன்னெடுக்க நடவடிககை எடுக்கப்பட்டுள்ளதகா சி.ஐ.டி சார்பில் இன்று மன்றில் ஆஜரான அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக கூறப்படும் உதவி பொலிஸ் அத்தியட்சர் திஜேரா நீதிவானுக்கு அறிவித்தார்.
வைத்தியர் சாபி விவகார வழக்கு இன்று -09- விசாரணைக்கு வந்த போத இந்த விடயம் நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
Post a Comment